Home உலகம் இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.. 7.4 ரிக்டராக பதிவு! VIDEO

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.. 7.4 ரிக்டராக பதிவு! VIDEO

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு சுலவேசி பகுதியில் கட்டடங்கள் இடிந்துள்ளன. மேலும் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின.

முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை விளக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு சுலவேசி மாகாணத்தில் மனாடோ பகுதியில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் ஒருவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மனடோவை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version