Tuesday, March 10, 2026
HomeUncategorizedஏசியாவின் முதல் பகிர் திரை (Split Screen) திரைப்படம் ‘பிகினிங்’

ஏசியாவின் முதல் பகிர் திரை (Split Screen) திரைப்படம் ‘பிகினிங்’

நம்ம தமிழ் சினிமாவிலும் தற்போது உலக சினிமாக்களுக்கு இணையா சில பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பார்த்திபன் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து முழு திரைப்படத்தை காண்பித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தற்போது ஒரே ஷாட்டில் உருவாகும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மற்றுமொரு முயற்சியாக பகிர் திரை திரைப்படம் உருவாகி வருறது.

அதாவது திரையில் ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகள் ஒளிபரப்பாகும். ஏசியாவின் முதல் பகிர் திரை படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் வினோத் கிஷன் மற்றும் கௌரி கிஷன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாய்ங்க. மேலும் ரோகினி, சச்சின் மணி ஆகியோரும் நடிக்கும் படத்துக்கு. கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். ஜெகன் விஜயா என்பவர் படத்தை இயக்குகிறார்.

தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் வினோத் மற்றும் கௌரி இருவரும் பகிர் திரையில் காணப்படுகின்றனர்.

இப்படத்திற்கு ‘பிகினிங்( தொடக்கம்’) என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்குது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments