Tuesday, June 23, 2026
Homeசெய்திகள்2017 TRB தேர்வு முறைகேடு; 18 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

2017 TRB தேர்வு முறைகேடு; 18 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினர் (ED) இன்று சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள சுமார் 18 இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய இந்தத் தேர்வில் தகுதியற்ற 196-க்கும் மேற்பட்ட தேர்வர்களின் மதிப்பெண்கள், தலா 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு முறைகேடாக மாற்றியமைக்கப்பட்டது தங்களின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அரசுப் பணி நியமனத்தில் நடந்த இந்த மாபெரும் ஊழலின் பின்னணியில் உள்ள பணப்பரிவர்த்தனைகள் மற்றும் அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்த ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில், இந்த முக்கிய நகரங்களில் உள்ள முக்கியப் புள்ளிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் தங்களது தீவிரச் சோதனையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments