Friday, March 13, 2026
HomeUncategorizedஎக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து

எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக குருவாயூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நேற்று (மே 26) மதுரை வந்தடைந்தது. பின்னர் மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி புறப்பட்டு சென்றது.

அப்போது திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலின் கடைசி பெட்டியில் புகை வருவதை கண்டு உடனடியாக கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.

விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கள்ளிக்குடியில் இருந்து புறப்பட்டு சென்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments