Home Uncategorized ஜுலை 1 (நாளை ) முதல் மின் கட்டணம் உயர்வு!

ஜுலை 1 (நாளை ) முதல் மின் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் ஜுலை 1 முதல் மின்  கட்டணம் உயர்கிறது. எனினும் வீடுகளுக்கு இந்த கட்டண உயர்வு இருக்காது என்றே தெரிகிறது.

நாளை மறுநாள் முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்துள்ளது.

யூனிட்டிற்கு, 15 காசு முதல், 37 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டதும், வீட்டு நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் செலவை, தமிழக அரசு ஏற்று, மின்வாரியத்திற்கு மானியமாக வழங்க உள்ளது.

Exit mobile version