Friday, May 8, 2026
Homeஉலகம்டெக்ஸாஸில் உருவாகும் பிரம்மாண்டம்.. எலான் மஸ்க் பலே அறிவிப்பு!

டெக்ஸாஸில் உருவாகும் பிரம்மாண்டம்.. எலான் மஸ்க் பலே அறிவிப்பு!

டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் உள்ள பிரம்மாண்டமான வளாகத்தில் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) மற்றும் டெஸ்லா (Tesla) நிறுவனங்கள் இணைந்து, இரண்டு அதிநவீன சிப் தயாரிப்புத் தொழிற்சாலைகளை உருவாக்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதில் ஒரு தொழிற்சாலை, அதிநவீன கார்கள் மற்றும் மனித உருவிலான ரோபோக்களுக்கு (Humanoid Robots) தேவையான சிப்களைத் தயாரிக்கும்; மற்றொரு தொழிற்சாலை விண்வெளியில் அமையவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அப்பால் விண்வெளியில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், பூமியில் ரோபோட்டிக்ஸ் துறையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதிலும் இந்தத் தொழிற்சாலைகள் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments