Tuesday, September 22, 2026
Homeசெய்திகள்அஸ்ஸாமில் இருந்து மதுரை கோவிலுக்கு 3,000 கி.மீ. பயணம்: ‘துர்கா’ யானையைச் சுற்றி எழும் சட்டக்...

அஸ்ஸாமில் இருந்து மதுரை கோவிலுக்கு 3,000 கி.மீ. பயணம்: ‘துர்கா’ யானையைச் சுற்றி எழும் சட்டக் கேள்விகள்!

அசாமில் உள்ள மானஸ் தேசியப் பூங்காவிலிருந்து ‘துர்கா’ என்ற 5 வயதுக் குட்டி யானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவு வாகனத்தில் கொண்டு வரப்பட்டது, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் பல்வேறு சட்டக் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யானைகள் மிக உயரிய பாதுகாப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தாலும், வளர்ப்பு யானைகள் என்ற பெயரில் தனியார் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படும் சட்ட முரண்பாட்டினை இச்சம்பவம் மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

மானஸ் தேசியப் பூங்காவில் உரியப் பராமரிப்பில் இருந்த ஒரு குட்டி யானையை இவ்வளவு அவசரகதியில் 3 நாட்களுக்குள் அனுமதி வழங்கி, உச்ச நீதிமன்ற உயர்மட்டக் குழுவின் ஒப்புதல் இன்றி மதுரைக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் என்ன வந்தது, 5 வயதே ஆன இந்த யானைக் குட்டியின் உண்மையான தாய் யார், அது தாயிடமிருந்து சட்டவிரோதமாகப் பிரிக்கப்பட்டதா, மேலும் இதன் பின்னணியில் பணப் பரிவர்த்தனை ஏதேனும் உள்ளதா என அஸ்ஸாமைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

துர்கா மட்டுமன்றி அஸ்ஸாமில் இருந்து மேலும் 4 யானைகளைத் தமிழகக் கோவில்களுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், யானைகளின் உரிமையியல் ஆவணங்கள் மற்றும் உடல்நலப் சான்றிதழ்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments