Tuesday, March 10, 2026
HomeUncategorizedஎம்.எஸ்.வி. நினைவு நாள்!

எம்.எஸ்.வி. நினைவு நாள்!

தமிழ் சினிமாவின் இசை வரலாறு எம்.கே.டி., பி.யு. சின்னப்பா, சுப்பராமன், ஜி.ராமநாதன், டி.ஜி. லிங்கப்பா, சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பல மேதைகளால் எழுதப்பட்டாலும், கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில், அந்த இசை வரலாற்றின் ஒரு பெயரை உச்சரிக்கும்போதே, உணர்வுகளை சிலிர்க்க வைத்தது. நாடி நரம்புகளை களி நடனம் புரியவைத்தது. இசை என்றால் இவ்வளவு இனிமையாக இருக்குமா? என புது விளக்கம் ஒன்றை, உரையாக எழுதியது.அந்த இசை வரலாற்றின் இனிப்பான பெயர்தான் “எம்.எஸ்.வி”. மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற நீண்ட இசையின், மென்மைகூட்டிய சுருக்கமான மெல்லிசைதான் எம்.எஸ்.வி.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினி, கமல் என எத்தனையோ கதாநாயகர்களின் படங்களுக்கு எழுதப்பட்டிருந்த வெற்றியின் முகவரியில், எம்.எஸ்.வி.யின் பெயர் பிரதான இடம் பெற்றிருந்தது.

சந்தம் பெரிதா? பாடல் பெரிதா? எல்லாம் சந்தங்களுக்கும் பாடல் எழுத முடியுமா? மெல்லிசை மன்னருக்கும், திரையுலகல் கம்பன் கண்ணதாசனுக்கும் ஒரு போட்டி. ஆனால் இந்தப், போட்டியில் உண்மையான வெற்றி ரசிகர்களுக்குத்தான். அந்தப் பாடல்தான் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் வரும் ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ என்ற பாடல்.

தமிழ் சினிமா இசை வரலாற்றில், அமர்க்களமான அத்தியாயமாகத் திகழ்ந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ் சினிமா இசையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கலந்திருக்கும் எம்.எஸ்.வி. என்ற இசைத்தொகுப்பு, 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி, இயற்கையின் விதிப்படி இயற்கை எய்தியது. ஆனால், அந்த இசைத்தொகுப்பு ஏதோ ஒரு வடிவில் ராகமாய், தாளமாய், லயமாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். காற்றில்லாத உலகைக் கற்பனை செய்து காண இயலுமா? எம்.எஸ்.வியின் பாட்டு இல்லாத பொழுதை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? எம்.எஸ்.வி. காற்று… உயிருள்ளவரை தமிழர்கள் அதை சுவாசித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments