Thursday, March 5, 2026
HomeUncategorizedஎஸ்.பி.வேலுமணியின் கீழ் இயங்கிய சென்னை மாநகராட்சியில் முறைகேடு புகார்

எஸ்.பி.வேலுமணியின் கீழ் இயங்கிய சென்னை மாநகராட்சியில் முறைகேடு புகார்

சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க வழங்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அதிக தொகைக்கு டெண்டர் விடப்பட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க ஓராண்டுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

*சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.2.31 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் Ks Solution என்ற தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது.

எஸ்பி வேலுமணியின் கீழ் இயங்கிய சென்னை மாநகராட்சியில் முறைகேடு புகார் எழுந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க ஓராண்டுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments