எதிர்க்கட்சியாக இருந்த போது, உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்று நீதிமன்றத்தில் தடை பெற்ற தி மு க, இன்று ஆளுங்கட்சியான பிறகு அ தி மு க அரசு, உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு நிதி வரவில்லை என வெள்ளை அறிக்கை விடுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்த போது, மின்கட்டணத்தை உயர்த்த கூடாது என்று போராட்டம் செய்த தி மு க ஆளுங்கட்சியான பிறகு, மின்கட்டணத்தை பத்து வருடங்கள் உயர்த்தாதது தவறு என வெள்ளை அறிக்கையில் சொல்கிறது.
எதிர்க்கட்சியாக இருந்த போது, சொத்து வரியை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தி மு க, சொத்து வரியை உயர்த்தாததால் தான் அரசுக்கு வருமானம் இல்லை என வெள்ளை அறிக்கையில் கூறுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்த போது, மானியங்களை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி மு க, ஆளுங்கட்சியான பின், மானியங்களை நேரடியாக பணமாக பெற்ற பயனாளிகள் குறித்த தகவல் இல்லை என்று வெள்ளை அறிக்கை விடுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்த போது, வரிவசூல் செய்வதை கொள்ளையடிக்கிறது அரசு என்று விமர்சித்த தி மு க, வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும் என வெள்ளை அறிக்கையில் கேட்கிறது.
அதாவது எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அரசு நாசமாக வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும் போது, அரசுக்கு வருமானம் வேண்டும்.
நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.

