Home லைஃப்ஸ்டைல் தீபாவளி வரப்போகுது.. சீக்கிரம் இந்த ஃபேஸ் பேக் போட்டு முகத்தை பளபளன்னு மாத்துங்க!

தீபாவளி வரப்போகுது.. சீக்கிரம் இந்த ஃபேஸ் பேக் போட்டு முகத்தை பளபளன்னு மாத்துங்க!

பண்டிகை காலம் என்றாலே அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதுவும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். அனைவருக்கும் கூடுதல் சந்தோஷம், கூடுதல் எக்சைட்மென்ட் உடன் இருக்கக்கூடிய பண்டிகை. இப்போது பண்டிகை காலம் என்பதால் பெண்கள் தங்கள் அழகில் கவனம் செலுத்த ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தீபாவளி நெருங்க இன்னும் சில நாட்களே  இருக்கிறது என்பதால் தங்கள் அழகை மேம்படுத்த பல முயற்சிகளை செய்து வருவார்கள். அதில் இந்த ஃபேஸ் பேக்கையும் சேர்த்து ட்ரை செய்யுங்கள் முகம் பளபளப்பாக மாறும்.

மஞ்சள் மற்றும் கற்றாழை:
 சிறிது மஞ்சள் தூளை கற்றாழை ஜெல்லுடன் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் தங்கம் போல் மின்னும்.

face pack

தயிர் மற்றும் தேனுடன் கடலை மாவு:
 கடலை மாவு, தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து ஒரு பேஸ்ட் போல கலந்து  அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் விட்டு , குளிர்ந்த நீரில் கழுவினால் இன்ஸ்டன்ட் க்ளோ கிடைக்கும். 

சந்தனப் பொடி பேக்:
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்து, பின்னர் முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாக மாறும். 

பப்பாளி பேக்:
நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் காய்ச்சாத பால் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

Exit mobile version