Sunday, March 22, 2026
HomeUncategorizedதிண்டுக்கல்லில் இப்படி ஒரு இடமா? கண்டிப்பா குழந்தைகளோடு போகவேண்டிய டூரிஸ்ட் ஸ்பாட்!

திண்டுக்கல்லில் இப்படி ஒரு இடமா? கண்டிப்பா குழந்தைகளோடு போகவேண்டிய டூரிஸ்ட் ஸ்பாட்!

மாசில்லாத சிறுமலை 

 திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிறுமலை மலைப்பிரதேசம். ஊட்டி கொடைக்கானலை விட இது சிறிய மலை பிரதேசம், காடுகளும் மலைகளும் சூழ்ந்த இயற்கை மூடு பனியும் கண்டு ரசிக்க சிறுமலைக்கு  கண்டிப்பாக செல்லலாம். நாம் வாழ்ந்து வரும் மாசடைந்த நகரங்களில் அதிகப்படியான மாசு சூழ்ந்த சூழல்கள் இல்லாத அற்புதமான மலைப்பிரதேசமானது சிறுமலை. 

 எப்படி செல்வது 

 திண்டுக்கல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. ட்ரெயினில் செல்பவர்கள் திண்டுக்கல் வந்து அடைந்து சிறுமலைக்கு  போகலாம். சிறுமலை செல்லும் பாதை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தனியார் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம்  பெற வேண்டும். பின்பு  45 நிமிடம் பயணத்தில் செருமலையை சென்று அடைந்து விடலாம். சிறுமலை ஒரு மிக அழகிய கிராமம் அங்கு  பள்ளிக்கூடம், ஊராட்சி மன்றம், அரசு பள்ளி தனியார் பள்ளி  இடங்களும் உண்டு. 

 விவசாய தொழில் 
 

அதிகப்படியாக  முக்கியமாக சிறுமலை வாழைப்பழம், காப்பி தோட்டம், மிளகு தோட்டம்  மற்றும் பலவகை காய்கறிகளும் விளைவிக்கின்றனர்.

 காடுகள் சூழ்ந்த மலை 

 இங்கிருக்கும் மலைகள் மிக அழகாக பச்ச பசேல்னு அதிகப்படியான பசுமை செல்வங்களை பெற்றுள்ளது பல நீர்த்தேக்கங்கள் நீர்வீழ்ச்சிகள் அரிய வகை காட்டு மரங்கள் பலவிதமான காட்டு விலங்குகள். மிக முக்கியமாக இங்கு உள்ள இயற்கை சூழ்நிலை ரம்மியமாகவும் இதமாகவும் பசுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் இயற்கையை விரும்புவர்கள் கண்டிப்பாக தங்களின் நகர வாழ்க்கையில் இருந்து ஒரு பிரேக் எடுத்து இந்த சிறுமலையை வந்து அதன் அழகினை ரசித்து தங்கள் உடலுக்கு தெம்பு பெற்று செல்லலாம். இங்கு காணப்படும் வியூ பாயிண்ட் களிலிருந்து நாம் காட்டு விலங்குகளையும் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம் காட்டெருமை காற்றுப்பன்றி செந்நாய் மான்கள் மயில் கிளி போன்ற பலவிதமான பறவைகளையும் காணலாம்.

 தங்கும் விடுதிகள் 

 தனியார் விடுதிகள் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் பயணிகளுக்கு பாதுகாப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஊரில் அதிகப்படியான கூட்டமே இருக்காது வாகனங்களும் கம்மியாகத்தான் செல்லும். இங்கு சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இல்லாவிட்டாலும் சிறுமலையின் அழகை நாம் அமைதியாக ரசிக்கலாம். பனிப்போர்வையாக கடந்து செல்லும் மேகம் கூட்டங்களை அனுபவிக்கலாம்.

 நீர்வீழ்ச்சி

  நீர்வீழ்ச்சி  உள்ளது அங்கு செல்வதற்கு சாலை வசதிகள் மிகவும் கம்மி ஆனால் ஜீப் வசதிகள் உண்டு ஒரு நபருக்கு தனியார் நீர்வீழ்ச்சிக்கு நுழைவு கட்டணமாக 200 ரூபாய் பெறப்படுகிறது. ஜிப் வசதிக்கு  800 ரூபாய் வாங்கப்படுகிறது.
 துணிகள் மாற்றிக் கொள்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி ரூம் வசதிகள் உண்டு.
 இங்க இருக்கும் இயற்கை  அனுபவித்து கொண்டே நாம்  தேவையான உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

 மற்ற இடங்கள்

 இங்கு மிக அழகான புதூர் தடுப்பணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து வழிந்து வரும் நீர்வீழ்ச்சி மிகவும் அழகாக இருக்கும் அங்கும் குளித்து நாம்  என்ஜாய் செய்யலாம். காட்டுக்கு நடுவில் ஒரு அற்புதமான சிவன் கோயில் உள்ளது அங்கு சென்று இயற்கையின் அழகில் இருக்கும் இறைவனை கண்டு ரசிக்கலாம். அரசு தோட்டக்கலை இங்கு செயல்படுகின்றது அங்கு நமக்கு தேவையான பூச்செடிகளை வாங்கிக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசாங்கம் பல்லுயிர் பூங்கா ஒன்று 120 ஏக்கர் அளவில் அமைக்க வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

 ட்ராவலர் டிப்ஸ்  

 இங்கு வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் இடம் கிடையாது. இதனால் நீங்கள் திண்டுக்கல்லிலேயே உங்கள் வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல்களை நிரப்பி கொண்டு வந்தால் வசதியாக இருக்கும்.
 மேலே பெரிய ஹோட்டல் வசதிகள் எல்லாம் இருக்காது. தனியார் தங்கும்  விடுதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்த செலவில் நாம் நண்பர்களுடனும்,குழந்தைகளோடும் சென்று சிறுமலையில் உள்ள இயற்கை வளங்களை கண்டு ரசித்து வரலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments