முன்னாள் ஜூனியர் சர்வதேச டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ் என்பவரை அவரது தந்தை வீட்டிலேயே சுட்டுக் கொன்றுள்ளார். எதனால் தந்தையே மகளை சுட்டுக் கொன்றார் என்ற தகவல் அறிந்த பலரும் ஷாக்கில் உள்ளனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
குர்கான் பகுதியில் வசித்து வருபவர் ராதிகா யாதவ்(27). இவர் ஜூனியர் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர்களில் விளையாடியவர். செக்டர் 57 பகுதியில் வசித்து வருகின்றனர். முதல் மாடியில் உள்ள சமையலறையில் ராதிகா இருந்தபோது தீபக் யாதவ் வீட்டின் உள்ளே நுழைந்து திடீரென ராதிகாவை மூன்று முறை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் ஒரு குண்டு அவரது கழுத்தில் பாய்ந்துள்ளது.மேலும் இரண்டு குண்டுகள் அவரது முதுகில் பாய்ந்து உள்ளன. துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் தரைத்தளத்தில் வசித்து வரும் தீபக்கின் இளைய சகோதரர் குல்தீப் மாடிக்கு விரைந்து சென்றுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து, ராதிகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ராதிகா உயிரிழந்துள்ளார்.
இதனால் ராதிகாவின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ராதிகா அங்கு ஒரு டென்னிஸ் அகாடமி நடத்தி வந்ததும், அதன் தொடர்பாக தந்தைக்கு மகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே துப்பாக்கி சூடுக்கு காரணம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் சந்திப் குமார் கூறும் போது,காவல்துறையினரின் கூற்றுப்படி, 49 வயதான தீபக் யாதவ் ஆரம்ப விசாரணையின் போது கொலையை ஒப்புக்கொண்டார். தனது மகளின் வருமானத்தை நம்பி இருந்ததற்காக தனது சொந்த ஊரான வசிராபாத்தில் உள்ள கிராமவாசிகள் தன்னை பலமுறை கேலி செய்ததாகவும், அவர் நடத்தி வந்த டென்னிஸ் அகாடமியை மூடுமாறு பலமுறை வற்புறுத்தியதாகவும் அவர் போலீஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
அதேபோல ராதிகா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடுவதும் தீபக்கிற்கு பிடிக்கவில்லையாம். ராதிகாவின் டென்னிஸ் பயிற்சிக்கு மட்டுமே 2.5 கோடி செலவிட்டுள்ளார். சமீபத்தில் திடீரென ஏற்பட்ட காயத்தால் ராதிகாவால் தொடர்ந்து டென்னிஸ் விளையாட முடியவில்லை. இதனால்தான் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் போட தொடங்கியுள்ளார். ஆனாலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது பிடிக்கவில்லை.
அடுத்தடுத்து இவர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கூறும் பொழுது, மகளுக்கு தந்தை தீபக் உறுதுணையாகவே இருந்து வந்தார். தினமும் பயிற்சிக்கு கூட்டி செல்வார். போட்டிகளுக்கு ராதிகா அவரது தந்தை தீபக் தான் அழைத்துச் செல்வர். அந்த அளவு சப்போர்டாக இருந்து வந்தவர், அவரது மகளை கொன்று விட்டார் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
