கயிலையம்பதியாம் சிவனுக்கு ஒரு முகம் மட்டுமல்ல…அவருக்கு ஐந்து முகங்கள். இவை பஞ்சானனம் எனப்படுகிறது. சிவனுக்கும் படைப்புப் பொருளான பிரபஞ்சத்துக்கும் இடையே உள்ள உறவை பஞ்சானனம் விவரிக்கின்றன.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று அந்த ஐந்து முகங்களும் வரிசைபடுத்தப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் காரண காரியங்கள் உண்டு. சிவன் பிரபஞ்சத்தை ஐந்து விதமாகப் பார்க்கிறான். சதாசிவம் எனப்படும் ஈசானமுகம். மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படும். உச்சியைப் நோக்கியபடி, அகண்ட பரவெளியின் மீது அப்பார்வையில் இருக்கும். உயிரினங்களுக்கு முக்தி என்னும் விடுதலையை வழங்கும் முகம்.
தத்புருஷ முகத்திற்கு கிழக்கு நோக்கிய பார்வை, வாயுமண்டலம் , ஆன்ம ஒளிக்கு எதிரான கறைகளும், இருளும் அதன் கண்காணிப்பில் இருக்கும். பிரபஞ்சத்தையே விழுங்கிப் பிறகு புதிதாக உருவாக்கும் தத்துவத்தின் வடிவமே தத்புருஷன். தெற்கு திசையைப் பார்ப்பது அகோரம். அக்னி எனும் நெருப்புக்கு எஜமானன்.
வடக்குதிசையைப் பார்ப்பது வாமதேவம். நீருக்கு அதிபதி; சத்யோஜாதன் என்ற முகம் மேற்கு நோக்கியது. படைக்கும் சக்தியின் வடிவம்.

