அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாகப் பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் கையெழுத்து அந்நாட்டின் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற உள்ளது.
வரும் கோடைகாலம் முதல் அமெரிக்கக் கரன்சிகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து அச்சிடப்படும் என்று அந்நாட்டு நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வழக்கமாக நிதித்துறைச் செயலரும், பொருளாளரும் மட்டுமே கையெழுத்திடும் நடைமுறை உள்ள நிலையில், இந்த புதிய மாற்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கைகளில் அதிபரின் நேரடிப் பங்களிப்பைப் பறைசாற்றும் விதமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
