நாட்டில் மீண்டும் ஊரடங்கு (லாக்டவுன்) அமல்படுத்தப்பட உள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்திகளே என்று மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், ஊரடங்கு தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இத்தகைய இக்கட்டான நேரங்களில் பொதுமக்கள் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டியது அவசியம் என்றும், தேவையற்ற பீதியை உருவாக்கும் வதந்திகளைப் பரப்புவது சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
