Monday, March 16, 2026
HomeUncategorizedவரும் 21ம் தேதி மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும்

வரும் 21ம் தேதி மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும்

மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் பயணிக்க 21-ம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!!

60 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் 6 மாதம் வரை பேருந்துகளில் கட்டணமில்லா பயண டோக்கன்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 40 பணிமனை பேருந்து நிலையங்களில் முத்த குடிமக்களுக்கு மதம் 10 டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 2023 ஜனவரி முதல் ஜூன் வரை இலவச பேருந்து பயண டோக்கன் டிசம்பர் 21 முதல் விநியோகம் செய்யப்படுகிறது. 

திருவான்மியூர், அடையாறு, மந்தைவெளி,சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட 40 இடங்களில் முத்த குடிமக்கள் டோக்கன்களை பெறலாம் என்று கூறியுள்ளனர்.

40 இடங்களிலும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 31 வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 வரை டோக்கன் பெறலாம். பிப் 1 முதல் அந்தந்த பணிமனைகளில் அலுவலக நேரத்தில் இலவச பேருந்து பயண டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments