Home செய்திகள் அதிமுகவில் யாருக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்? பரபரக்கும் அரசியல்!

அதிமுகவில் யாருக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்? பரபரக்கும் அரசியல்!

தமிழக சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்துத் தங்களது நிலைப்பாட்டை விளக்க அதிமுகவின் இரு அணிகளும் தொடர்ந்து காத்திருக்கும் சூழலில், கட்சி அங்கீகாரத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியே அதிகாரப்பூர்வ சட்டமன்றக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அதேவேளையில், சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்தினாலும், சபாநாயகர் அந்த மனுக்களை உடனடியாகப் பரிசீலிக்காமல் நீண்ட கால ஆய்விலேயே வைத்திருக்கக் கூடும் என்று பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ அங்கீகாரம் ஒருபுறம் இருந்தாலும், எதிர்த்தரப்பு மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விவகாரத்தில் சபாநாயகரின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

Exit mobile version