Home செய்திகள் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை: அமைச்சர்கள் மற்றும் துறைகள் முழு பட்டியல்!

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை: அமைச்சர்கள் மற்றும் துறைகள் முழு பட்டியல்!

விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 35 அமைச்சர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன், ராஜேஷ் குமார் என 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். விசிகவை சேர்ந்த வன்னி அரசு, மற்றும் ஐயூஎம்எல் கட்சியை சேர்ந்த ஷாஜஹானும் அமைச்சர்களாக உள்ளனர்.

  • முதல்-அமைச்சர் விஜய் (பெரம்பூர்) – பொது, பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், போலீஸ், உள் துறை, இளைஞர் நலன், குழந்தைகள், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்.
  • ஆனந்த் (தி.நகர்) – ஊரக வளர்ச்சி, ஊராட்சி, நீர்ப்பாசனம்.
  • ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்) – பொதுப்பணித்துறை (PWD), கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், விளையாட்டு மேம்பாடு.
  • அருண்ராஜ் (திருச்செங்கோடு) – சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை.
  • கே.ஏ.செங்கோட்டையன் (கோபி) – வருவாய், பேரிடர் மேலாண்மை, கிராமதானம், சட்டசபை.
  • வெங்கடரமணன் (மயிலாப்பூர்) – உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு.
  • நிர்மல்குமார் (திருப்பரங்குன்றம்) – மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள்.
  • ராஜ்மோகன் (எழும்பூர்) – பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம்.
  • பிரபு (காரைக்குடி) – கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
  • கீர்த்தனா (சிவகாசி) – தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு.
  • ஸ்ரீநாத் (தூத்துக்குடி) – மீன்வளம், மீன்வள மேம்பாட்டுக் கழகம்.
  • கமலி (அவினாசி) – கால்நடை பராமரிப்பு.
  • சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்) – பால் மற்றும் பால்வள மேம்பாடு.
  • ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சீபுரம்) – வனம் (Forest).
  • வினோத் (கும்பகோணம்) – வேளாண்மை, தோட்டக்கலை, சர்க்கரை, கரும்பு மேம்பாடு.
  • ராஜீவ் (திருவாடானை) – சுற்றுச்சூழல், மாசுகட்டுப்பாடு, காலநிலை மாற்றம்.
  • ராஜ்குமார் (கடலூர்) – வீட்டுவசதி, நகர்ப்புற திட்டங்கள், சி.எம்.டி.ஏ (CMDA).
  • காந்திராஜ் (அரக்கோணம்) – கூட்டுறவு (Cooperation).
  • பி.மதன்ராஜா (ஓட்டப்பிடாரம்) – குடிசைத் தொழில்கள், ஊரகத் தொழில்கள், சிறு தொழிற்சாலைகள்.
  • ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) – பெண்கள் நலன், சமூகநலன், சத்துணவுத் திட்டம்.
  • ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) – சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம். (காங்கிரஸ்)
  • விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு) – கைத்தறி மற்றும் ஜவுளி, காதி வாரியம்.
  • லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்) – வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைச் சட்டம், நிதித்துறை சார்ந்த சில பிரிவுகள்.
  • விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு) – மோட்டார் வாகன சட்டங்கள், போக்குவரத்து.
  • ரமேஷ் (ஸ்ரீரங்கம்) – இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் (HR&CE).
  • விஸ்வநாதன் (மேலூர்) – உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். (காங்கிரஸ்)
  • குமார் (வேளச்சேரி) – செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் (IT), டிஜிட்டல் சேவைகள்.
  • தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்) – வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், அகதிகள் நலன்.
  • சம்பத்குமார் (கோவை வடக்கு) – பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்.
  • முகமது பர்வேஸ் (அறந்தாங்கி) – தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி.
  • சரத்குமார் (தாம்பரம்) – மனிதவள மேம்பாடு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.
  • மரிய வில்சன் (ஆர்.கே.நகர்) – நிதி (Finance), ஓய்வூதியம் மற்றும் திட்டமிடல்.
  • விக்னேஷ் (கிணத்துக்கடவு) – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை.
  • ஷாஜகான் (பாபநாசம்) – சிறுபான்மையினர் நலத்துறை (ஐயூஎம்எல்)
  • வன்னி அரசு (திண்டிவனம்) – சமூக நீதித்துறை (விசிக)
Exit mobile version