Home Uncategorized காந்தியை கொலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளின்று

காந்தியை கொலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளின்று

1948 ஜனவரி 30ஆம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக மகாத்மா காந்தி சென்றபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.

மத்திய அரசின் உத்தரவின் பேரில், காந்தி படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க டெல்லி செங்கோட்டையில் தனி விசாரணை அரங்கு கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது. காந்தி கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்டு பேர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நதுராம் கோட்ஸே மற்றும் கொலைக்கு மூளையாக செயல்பட்ட நாராயண் ஆப்தே இருவருக்கும் 1949, இதே நவம்பர் 15 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

Exit mobile version