Home உலகம் மது அருந்துவதை தவிர்க்கும் ஜென் Z – உலக மதுபானத் துறைக்கு 830 பில்லியன் டாலர்...

மது அருந்துவதை தவிர்க்கும் ஜென் Z – உலக மதுபானத் துறைக்கு 830 பில்லியன் டாலர் இழப்பு!

இன்றைய இளம் தலைமுறையினரான ‘ஜென் ஜி’ (Gen Z) இளைஞர்கள் மது அருந்தும் பழக்கத்தைப் பெருமளவில் தவிர்த்து வருவதன் காரணமாக, உலகளாவிய மதுபானத் துறை கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 830 பில்லியன் டாலர் வரை மாபெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாக அதிரடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பழைய தலைமுறையினரைப் போலக் கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு மதுவே பிரதானம் என்ற நிலையை மாற்றி, தங்களின் உடல்நலம், மனநலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு (wellness) ஆகியவற்றிற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பண்பு இந்த இளைய தலைமுறையினரிடம் பெருமளவில் அதிகரித்துள்ளது.

இதனால் மதுபானங்களின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், அதற்கு மாற்றாக ஆல்கஹால் அற்ற பானங்கள் (Non-alcoholic beverages), குறைந்த கலோரி கொண்ட ‘மாாக்டெயில்கள்’ மற்றும் மூலிகைச் சத்து பானங்கள் ஆகியவற்றிற்கான தேவை சந்தையில் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

ஜென் ஜி இளைஞர்களின் இந்த அதிரடி வாழ்க்கை முறை மாற்றம் வெறும் மது அருந்தும் பழக்கத்தை மட்டும் மாற்றாமல், சர்வதேச பான உற்பத்தி நிறுவனங்களின் சந்தை உத்திகளையும் மறுவரையறை செய்து, உலகளாவிய மதுபானத் துறையையே ஒட்டுமொத்தமாக உருமாற வைத்துள்ளது.

Exit mobile version