Home செய்திகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 97 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் சமதா கட்சி தமிழ்நாடு செயற்குழுக்...

ஜார்ஜ் பெர்னாண்டஸ் 97 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் சமதா கட்சி தமிழ்நாடு செயற்குழுக் கூட்டம்!

இந்திய ஒன்றியத்தின் தொழிற்சங்க முன்னோடியும் தொழிலாளர் தோழனுமாகிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் 97 ஆவது பிறந்த நாள் விழாவும், தமிழ்நாடு சமதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டமும் 03-06-2026 அன்று முற்பகல் 10.30 மணியளவில் சென்னை ,தி நகர், எஸ் ஓட்டலில் நடைபெற்றது.

அனைத்திந்திந்தியப் பொதுச் செயலாளர் ஜி. எஸ். மது ஹரி கிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் படத்தை நாகாலாந்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும் நாகா மக்கள் முன்னணியின் செயல் தலைவருமான தெனுச்சோ துன்பி திறந்து வைத்தார். அனைவரும் மலர்தூவி மரியாதை செய்தனர்.

தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் ஆவல் கணேசன், புரட்சி அதிமுக நிறுவனர் வ. புகழேந்தி ஆகியோர் ஜார்ஜ் பெர்னாண்டசின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். சமதா கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் குமரி நம்பி சிறப்புரையாற்றினார். விழாவில் மாணாக்கருக்கானக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. சமதாகட்சி மாநில இளைஞரணித் தலைவர் கௌதம் நன்றியுரை ஆற்றினார்.

தொடர்ந்து சமதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே. சின்னதாஸ் தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சமதா கட்சியின் அனைத்திந்திய முதன்மைப் பொதுச் செயலாளர் என்.ஏ.கோன் கட்சிப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாற்றினார். மாநில முதன்மைப் பொதுச் செயலாளர் பூங்கா மோகன், மாநிலச் செயலாளர் கணேசன் செல்லத்துரை, மதுரை மாவட்டத் தலைவர் நாகராஜ், தேனி மாவட்டத் தலைவர் ஹாணஸ்ட் கார்த்திக் பாண்டி, ரகுராம், கார்த்திக், அம்பத்தார் ஜெயக்குமார், ரேவதி உள்ளிட்டவர்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்திந்தியப் பொதுச் செயலாளர் விஜயகுமார் தீர்மானங்களை விளக்கி உரையாற்றினார். திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் கோவிந்தம்மாள் நன்றி கூறினார். மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிந்தனையில் “புதிய சிந்தனை – புதிய இந்தியா ” என்னும் இரட்டைப் பொருளியல் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அனைத்திந்தியத் தலைவர் குமரி நம்பி இத்திட்டத்தை விளக்கினார். வீட்டிற்கு ஒரு குறுந்தொழில், உள்ளாட்சிக்கு ஒரு வேளாண் தொழிற்சாலை என்னும் இத்திட்டம் இன்றைய நாட்டில் நடைமுறையில் உள்ள ஒன்றிய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் என்னும் மேலிருந்துக் கீழான நிதிக் கட்டமைப்பை மாற்றி கீழிருந்து மேலான நிதிக் கட்டமைப்பை உருவாக்கும் . கடன் வாங்காமல், வரிகள் இல்லாமல் , உள்ளூரிலேயே அரசு வேலை என்னும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் திட்டமாக இது இருக்கும்.

தொடர்ந்து ஜார்ஜ் பெர்னாண்டசின் வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வழியாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் தி கிரேட் என்னும் திரைப்படத்தை நாகா முன்னணி செயல் தலைவர் தெனுச்சோ துன்யி, சமதா கட்சி அனைத்திந்திந்திய முதன்மைப் பொதுச் செயலாளர் என் .ஏ .கோன் இருவரும் தொடங்கி வைத்தனர். இயக்குநர் நந்தா பெரியசாமி திரைப்படம் குறித்து விளக்கினார்.

Exit mobile version