Home செய்திகள்  கிளாம்பாக்கம் கட்டாயம் ரத்து! ஆம்னி பேருந்துகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 கிளாம்பாக்கம் கட்டாயம் ரத்து! ஆம்னி பேருந்துகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்திருந்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு மற்றும் மாதவரம் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் பயணிகளை ஏற்றி மற்றும் இறக்குவதற்கு ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி இந்த முக்கியத் தீர்ப்பினை அளித்துள்ளது.

போக்குவரத்துத் துறையின் முந்தைய கட்டுப்பாடுகளால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்த பயணிகளுக்கும், பேருந்து ஆபரேட்டர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தளர்வு உத்தரவு ஒரு மிகப்பெரிய நிம்மதியையும் தற்காலிகத் தீர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version