பெருந்தொழிலதிபரும் , புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவருமான திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் தலைமையிலான “புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் பொன் பெருவிழாவின்” இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் முதல் அமர்வானது, டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் இளமுருகு முத்து அவர்களின் தலைமையில் “கம்பன் இசை அரங்கம்” என்கிற தலைப்பில் இன்று (19/07/2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கம்பனின் 50 பாடல்களை தெரிவு செய்து புதுக்கோட்யைச் சேர்ந்த 50 இசைக் கலைஞர்கள் இணைந்து பாடி சிறப்பித்தனர்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. க.மாதவன் உணவக உரிமையாளர்கள் சங்க செயலாளர் திரு.கே.ஜி.ராஜா, ஸ்ரீசாய்சேவா பவுண்டேஷன் திரு. ஜே.பி.ஆர். சுப்ரமணியம், மாவட்ட நுகர்வோர் சங்கத்தலைவர் திருமதி.லதா உத்தமன், திரு.வீனஸ்.ராஜேந்திரன், காரைக்குடி கம்பன் கழகத்தின் ஏ.ஆரவீ.மாணிக்கவேலு, கே.ஆர்.எஸ்.ஸ்போர்ட்ஸ் சேகர், விநாயகா பார்மா திரு.தி.குமார், மாமல்லன் ஐ.ஏ.எஸ்.அகாடமி முனைவர். ப.செந்தில் குமரன், பட்டுக்கோட்டை திரு.செ.முகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுகை ச. பாரதி தொகுப்புரை வழங்க, நிகழ்ச்சியின் இறுதியில் பார்வை இசைப்பள்ளி திரு. பாலஸ்ரீ கே.ஹரிமோகன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்பமை பி.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
அரசு மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் டாக்டர். ஜி.ஏ.ராஜ்மோகன் புதுகை திருக்கோவில்களின் செயல் அலுவலர் திரு.எஸ். முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுக்கோட்டை கம்பன் கழகத்தலைவர் திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் பங்கேற்புடன், நீதியரசர் மாண்பமை பி.புகழேந்தி அவர்களால் கம்பன் கழகம் சார்பில் ராம்ராஜ் காட்டன் திரு.நாகராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்ட “கம்பன் மாமணி” விருதினை, அவர் சார்பில் திருப்பூர் கம்பன் கழகச்செயலாளர் திரு.சோ.ராமகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
“இலக்கிய மாமணி” விருது கலைமாமணி, முனைவர் மருத்துவர் தஞ்சை திரு. சு. நரேந்திரன் அவர்களுக்கும்,
“சேவை மாமணி” விருது சேவாலயா திரு.வி. முரளிதரன், அறந்தாங்கி சமூக நல அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர். திரு.ஏ.ஜி. சரவணன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
புதுகை கம்பன் கழக துணைத்தலைவர் திரு.எம்.ஆர்.எம். முருகப்பன் அவர்கள் வரவேற்புரை வழங்க, புதுகை.ச.பாரதி தொகுப்புரை நிகழ்த்த, நிகழ்ச்சியின் முடிவில் கம்பன் கழக இணைச்செயலாளர் முனைவர்.வெ.முருகையன் நன்றியுரை ஆற்றினர்.