ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலிவுட் பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி சிறப்பித்து வருகிறது.
அந்த வகையில், நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டபோது, நடிகை பூர்ணா அல்லது ஷாம்னா காசிம் உடன் இருந்தார்.
கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட கால வசிப்பிடமாகும், இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சர் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது மற்றும் அவர்களின் வணிகத்தின் முழு உரிமையையும் வழங்குகிறது.
இதுவரை நடிகர்கள் திரிஷா, ஜோதிகா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், நக்மா, ராதா, பார்த்திபன், கமல், விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, மீனா, சிம்பு, நாசர் போன்ற பல பிரபலங்கள் இந்த விசா பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து நமது சீயான் விக்ரம் பெற்று இருப்பது அவர்களின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

