ட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சிக்கே ஆட்சி அமைக்க முதலில் அழைப்பு விடுக்க வேண்டும் என்ற அரசியல் சாசன மரபை மீறி, ஆளுநர் மாளிகை மெத்தனமாகச் செயல்படுவது திட்டமிட்டே முட்டுக்கட்டைப் போடும் செயல் எனத் தமிழக வெற்றிக் கழகத் தரப்பினர் கொந்தளித்து வருகின்றனர்.
ஒருவேளை ஆளுநர் கோரிய பட்டியலை நாளை மாலைக்குள் சமர்ப்பித்தால் மே 8 அன்று பதவியேற்பு நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், எண் கணித அடிப்படையில் 8 ராசியில்லாத எண் எனக் கருதப்பட்டால் அன்றும் விழா நடைபெறாது.
தொடர்ந்து மே 9, 10 ஆகிய தேதிகளில் அஷ்டமி மற்றும் மே 11-ல் நவமி என ‘சூனிய திதிகள்’ வருவதாலும், மே 12 செவ்வாய்க்கிழமை என்பதாலும் அந்தத் தேதிகளிலும் பதவியேற்பு நடக்க வாய்ப்பில்லை; இதனால் அடுத்த சுபமுகூர்த்த நாளான மே 13 அன்றுதான் விழா நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தத் தாமதங்களுக்குப் பின்னால் பா.ஜ.க.வின் அரசியல் அழுத்தம் இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுவது, மக்கள் மத்தியில் விஜய் மீதான அனுதாபத்தை அதிகரிப்பதோடு, எதிர்காலத்தில் இதற்குப் பெரிய அரசியல் விளைவுகள் ஏற்படும் என்பதையும் உணர்த்துகிறது.

