Tuesday, June 23, 2026
Homeஆன்மீகம்சிவகாசி பத்திரகாளியம்மன் திருவிழாவில் வானை கவர்ந்த பிரம்மாண்ட வாணவேடிக்கை!

சிவகாசி பத்திரகாளியம்மன் திருவிழாவில் வானை கவர்ந்த பிரம்மாண்ட வாணவேடிக்கை!

சிவகாசியின் காவல் தெய்வமான பத்திரகாளியம்மன் கோவில் சித்திரைப் பொங்கல் திருவிழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி பக்தர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

சிவகாசிக்கே உரித்தான பாணியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வான்வெளியில் வர்ண ஜாலங்களை நிகழ்த்திய இந்த வாணவேடிக்கை, இரவைப் பகலாக்கும் வகையில் பிரம்மாண்டமாக அமைந்தது.

சித்திரைத் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து, பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்தி அம்மனைத் தரிசித்து வரும் வேளையில், இந்த வாணவேடிக்கை திருவிழாவின் சிறப்பம்சமாக அமைந்து சிவகாசி நகரையே விழாக்கோலம் பூணச் செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments