Home Uncategorized கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு! தெறித்து ஓடிய மக்கள்!

கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு! தெறித்து ஓடிய மக்கள்!

மெக்சிகோவின் குவானாஜூவாடோ மாகாணத்தில் இரபுவாடோ நகரில் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற உள்ளூர்வாசிகள் நடனமாடியும், மது அருந்தியும் கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிப்போம். அவர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version