Home Uncategorized ஜீ.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்

ஜீ.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடிக்க இருக்கும் புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில்    ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து  நடிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் ஏற்கனவே, ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் படத்தினை இயக்கியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

Exit mobile version