Home Uncategorized ஹீரோயினாக அறிமுகம்: ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்கிய இயக்குநர் ஷங்கர் மகள்

ஹீரோயினாக அறிமுகம்: ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்கிய இயக்குநர் ஷங்கர் மகள்

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சினிமாவில் நடிகையாக அறிமுகமாவதையொட்டி இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகர் ரஜினியை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார்.

நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் ‘விருமன்’ படத்தில் அதிதி அறிமுகமாகிறார். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதனையொட்டி, நேற்று நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினார். இதனை பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அதிதி ஷங்கர்.

Exit mobile version