Home Uncategorized நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்கிறது

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்கிறது

202 மையங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். நீட் தேர்வு எழுத நாடு  முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே  விண்ணப்பித்துள்ளனர். ஜீன்ஸ், சல்வார்,  நீளமான ஸ்கர்ட், டிரவுசர், டி சர்ட்ஸ், சர்ட் ஆகியவற்றை அணிந்து வரலாம்.

முழுக்கை சட்டை, பெரிய பட்டன் கொண்ட சட்டைகள், அடர் நிறம் கொண்ட ஆடைகளை  அணியக் கூடாது. கட்டாயம் ஷூ அணிந்து வரக் கூடாது. செருப்பு அணிந்து வரலாம். நகைகளை அணிந்து வரக் கூடாது. மதம் சார்ந்த நகைகளுக்கு விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது.  தலையில் ஸ்கார்ப் மற்றும் தலைப்பாகை அணிந்து வரலாம். 

ஆனால், பரிசோதிக்கப்படுவார்கள்.  வாட்ச் எந்த காரணம் கொண்டும் அணிந்து வரக்  கூடாது. தண்ணீர் பாட்டில், ஹால் டிக்கெட் எடுத்து வர வேண்டும். அரசு  வெளியிட்டு இருக்கும் போட்டோ ஐடி கார்டு, பிடபுள்யூடி சான்றிதழ் கட்டாயம்  எடுத்து வரவேண்டும். பால் பாயின்ட் பென் தான் கொண்டு வரவேண்டும். செல்போன்,  புளூடூத், இதுபோன்ற தகவல்களை பரிமாறும் வேறு எந்த சாதனங்களையும் எடுத்து  வரக் கூடாது. தேர்வு மையங்களில் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு  இருக்காது.

பைகள், சிறுதீனிகள், புத்தகம், பிரின்ட் எடுக்கப்பட்ட  பேப்பர்கள், கொண்டு வரக்கூடாது. எந்தக் காரணம் கொண்டும் கைநாட்டு ஹால்  டிக்கெட்டில் வைத்து இருக்கக் கூடாது. தனியாக அமர வேண்டும் தேர்வு  மையங்களுக்குள் செல்வதற்கு முன்பாக உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும். 99.4  டிகிரிக்கு மேல் இருந்தால், 20 நிமிடம் தனியாக அமர வைக்கப்படுவார்கள். 

 அதன் பின்னரும் உடல் வெப்பநிலை குறையவில்லை என்றால் தனி அறையில் வைத்து  தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் 12.30 மணிக்கு மையங்களுக்கு வந்து விட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அந்தந்த  மாவட்டங்களில் ‘நீட்’ தேர்வு ஒருங்கிணைப்பு குழுக்கள் தேர்வு மையங்களில்  பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை  தடுக்கும் விதமாகவும், தேர்வு எழுத வருகை தரும் மாணவ, மாணவிகள் சமூக  இடைவெளியை கடைப்பிடித்து தேர்வு எழுதும் வகையிலும் ஒவ்வொரு மையத்திலும்  ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version