இந்தியா 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வரலாறு படைத்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, 3வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில், டி20 வெற்றி கொண்டாட்டத்தின்போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொண்டாட்டத்தின் போது தேசியக் கொடியை அணிந்தபடி, காதலி மஹிகா ஷர்மாவை மேடையிலேயே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இவ்வாறு சகல சேட்டைகளை செய்த இவரை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருவதுடன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.