நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும், அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும் வலம் வந்த காளியம்மாள், இன்று முறைப்படி அதிமுகவில் இணைந்தார்.
கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அவர், சுமார் ஓராண்டு கால இடைவெளிக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆவேசமான பேச்சாற்றல் கொண்ட காளியம்மாளின் வருகை, எதிர்வரும் தேர்தலில் அதிமுகவிற்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
