Home Uncategorized ஹாட்ரிக் ஹிட்- சந்தோஷத்தில் துள்ளிகுதிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்!

ஹாட்ரிக் ஹிட்- சந்தோஷத்தில் துள்ளிகுதிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்!

புஷ்பா, தண்டேல், குபேரா என தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் இசைப்புயல் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில்,  வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர்  ஹிட்ஸ் தந்து, அசத்தியுள்ளார். இந்த சாதனை மூலம் தான் உண்மையான இசை சாம்ராட் என்பதை நிரூபித்துள்ளார். 

புஷ்பா 1 & 2 

அல்லு அர்ஜுனின் புஷ்பா பிராஞ்சைஸ் – பாகம் 1 மற்றும் பாகம் 2 – இல் டிஎஸ்பியின் இசை படத்தின் உயிராக இருந்தது.  “ஊ சொல்லவா”, “ஸ்ரீவள்ளி” முதல் “புஷ்பா புஷ்பா” என  அப்படத்தின் பாடல்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை,  இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. அவரது இசை, புஷ்பாவின் நறுமணத்தை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது.

Dsp

தண்டேல் 

சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான தண்டேல் திரைப்படத்தில், டிஎஸ்பியின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் (Background Score) தான், அந்த படத்தை புதிய உயரத்திற்கு கொண்டுசென்றன. அழகு, அனுபவம், இசை அனைத்தையும் ஒரே சேர உணர வைத்த இப்படத்தின் வெற்றிக்கு பின்னால் DSP-ன் பங்களிப்பு முக்கிய காரணமாகும்.

குபேரா

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் – எளிய சமூக பின்னணியில் இருக்கும் பிச்சைக்காரர்களை தழுவிய கதை. இதில் டிஎஸ்பி வழங்கிய பாடல்களும், குறிப்பாக ரீரெக்கார்டிங்கும், கதையின் உணர்வுகளை பல மடங்கு உயர்த்துகின்றன. இசையின் வலிமை இப்படத்தை ஒரு வசூல் ராக்கெட்டாக மாற்றியுள்ளது.

இளமையில் துவங்கிய அவரது இசைப் பயணம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில் 2025 ஆம் வருடம் அடுத்தடுத்த பிளாகபஸ்டர் ஹிட்டுகளால் டிஎஸ்பியின் இசை சிகரங்கள் தொடரவுள்ளது. இந்திய இசைக்கான இளவரசர் என்றால் அது ராக்ஸ்டார் டிஎஸ்பி தான்!”

Exit mobile version