Home Uncategorized சினிமாவில் பல காலமாக போதை பொருள் இருக்கு- வெளிப்படையாக பேசிய விஜய் ஆண்டனி!

சினிமாவில் பல காலமாக போதை பொருள் இருக்கு- வெளிப்படையாக பேசிய விஜய் ஆண்டனி!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் லியோ ஜான் பால் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் “மார்கன்”. இந்த வாரம் இந்த படம் திரைக்கு வரும் நிலையில் இது தொடர்பாக நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்டனர். ஆனால் அதனை மறுக்காமல் பதிலளித்துள்ளார் விஜய் ஆண்டனி.

 இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்த விஜய் ஆண்டனி, ஹீரோ, எடிட்டர், தயாரிப்பாளர் என பன்முக திறமைசாலியாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது “மார்கன்” திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி தனது தங்கை மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்தப் படத்தில் சைக்கோ வில்லனாக விஜய் ஆண்டனியின் தங்கை மகன் அஜய் தீசன் நடித்துள்ளார்.

Vijay Antony

 சமீபத்தில் நடந்த ப்ரமோஷன் விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனியிடம் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதை கேள்வியாக எழுப்பப்பட்டது. இதற்கு சற்றும் தயங்காமல் நடிகர் விஜய் ஆண்டனி,” இந்த பிரச்சனை ரொம்ப வருஷமாக இருந்து வருகிறது. சிகரெட் பிடிப்பதே ஒரு போதை தான் என்றும், தவறான செயல்களில் அதிகம் ஈடுபடாமல் இருப்பது தான் உடலுக்கு ஆரோக்கியத்தை வரவழைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஸ்ரீகாந்த் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. விசாரணை நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக நீதிமன்றம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் சினிமா துறையில் காலாகாலமாக போதைப்பொருள் பழக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது” என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.

Exit mobile version