தமிழ்நாட்டின் உள் மாவட்டப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 38.6°C மற்றும் மீனம்பாக்கத்தில் 39°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளில், கடல் காற்று வீசாத சூழல் நிலவுவதால், வறண்ட வானிலை மற்றும் குறைந்த ஈரப்பதத்துடன் இன்றும் வெப்பநிலை 38 முதல் 39°C வரை பதிவாக வாய்ப்புள்ளது.
அதேபோல், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் அளவு 40°C வரை உயரக்கூடும்.
மறுபுறம், மேற்கு கடற்கரைப் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் பரவலாக மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அங்குள்ள மக்களுக்கு தற்போதைக்கு மழையிலிருந்து நிம்மதி கிடைக்க வாய்ப்பில்லை;
நாளை மாலைக்குப் பிறகே அங்கு மழை படிப்படியாகக் குறையக்கூடும்.
அதேநேரம், தென்னிந்தியப் தீபகற்பப் பகுதிகளான கேரளா மற்றும் தெற்கு கடலோர கர்நாடகாவில் இன்று முதல் மழையின் வேகம் மெல்லக் குறையத் தொடங்கும்.
