தென்மேற்குப் பருவமழை தொடங்கியது முதல் ஏற்ற இறக்கங்களுடன் சீரற்ற முறையில் பெய்து வந்த நிலையில், தற்போது கர்நாடகக் கடலோரப் பகுதிகள் மற்றும் கேரளாவிற்குச் சாதகமானச் சூழல் உருவாகியுள்ளது.
வரவிருக்கும் நாட்களில் ‘எம்.ஜே.ஓ’ (MJO – Madden-Julian Oscillation) நகர்வு மற்றும் பருவக்கால மாற்றங்கள் காரணமாக, அடுத்த சில வாரங்களுக்கு இந்த பிராந்தியங்களில் தொடர்ச்சியான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் காவிரி ஆற்றுப் படுகைகளுக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதேவேளையில், அடுத்த சில நாட்களுக்குத் தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழை தொடரக்கூடும்;
இது சென்னை உள்ளிட்ட நகரங்களில் நிலவி வரும் வெயிலின் தாக்கத்தைக் குறைத்து நிம்மதியைத் தரும்.
இருப்பினும், தென் தமிழகப் பகுதிகளில் பருவமழை முழுமையாக தீவிரமடையும் வரை வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை
