Home செய்திகள் பரந்தூர் விமான நிலையம்: திட்டத்தை கைவிடக் கோரி தமிழகத்திலிருந்து எந்தக் கடிதமும் இல்லை – மத்திய...

பரந்தூர் விமான நிலையம்: திட்டத்தை கைவிடக் கோரி தமிழகத்திலிருந்து எந்தக் கடிதமும் இல்லை – மத்திய அரசு!

பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை நிறுத்தவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ வலியுறுத்தி தமிழ்நாடு அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்றும், அத்திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்களவையில் தெளிவுபடுத்தியுள்ளது.

திமுக எம்பி பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், கடந்த 2024 செப்டம்பரில் TIDCO சமர்ப்பித்த ரூ.10,500 கோடி மதிப்பிலான முதற்கட்ட விண்ணப்பத்திற்கு, கடந்த 2025 ஏப்ரல் 7-ஆம் தேதி கொள்கை ரீதியிலான ஒப்புதல் வழங்கப்பட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தவெக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என மக்களிடம் கூறி வரும் நிலையில், திட்டத்தைக் கைவிடக்கோரியோ அல்லது மாற்றக்கோரியோ மாநில அரசிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version