திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவண படமென சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திமுக ஆதரவாளர்கள் சதி.. முருக பக்தர்கள் முறியடிப்போம்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பானது இன்று வரை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தான் அப்படியே உள்ளது. இதுவரை அதன் மீது தடையோ, அல்லது வேறுவித மேல்முறையீடுகளோ இல்லை . உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதே தவிர இதுவரை இன்னும் நிலுவையில் தான் உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு மதுரையில் எட்டு லட்சம் மக்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு சாட்சியாக அமைந்தது.
புதிய ஆட்சி அமைத்த பிறகு திமுக ஆதரவாளர்கள் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்து வருகிறார்கள் . இதன் தொடர்ச்சியாக நீதிமன்ற நேரடி விசாரணையில் இருக்கும் திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு எதிராக ஆவணப்படம் திரையிடுவதாக சற்று முன் ஒரு போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இது குறித்து நேரடியாக இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் திரு. ஏ.டி. இளங்கோவன் விசாரித்து, இது சட்டவிரோதமான செயல் என இந்து முன்னணி சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ப்ர்வ்யூ தியேட்டரில் தனிப்பட்ட முறையில் இந்த திரைப்படம் வெளியிடுவதாக கூறினாலும் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்து பகிரங்கப்படுத்தி விளம்பரப்படுத்தியது சட்டவிரோதமானது. சினிமா தணிக்கைத் துறையின் சான்றிதழ் இல்லாமல் பொது பார்வைக்கு வெளியிடக்கூடாது.
எனவே தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இந்தப்படத்தை வெளியிட சதி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் படத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக காவல்துறை திமுகவின் யின் சதிக்கு உடந்தையாக, இதனை வேடிக்கை பார்க்கும் என்ற நிலை ஏற்பட்டால் முருக பக்தர்கள் இந்து முன்னணி தலைமையில் நுங்கம்பாக்கம் ஃபோர் பிரேம்ஸ் ப்ரீவ்யூ தியேட்டரை முற்றுகையிட்டு ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என எச்சரிக்கிறோம்.
