Home Uncategorized சமூக தளங்களில் வைரலாகும் நடிகர் சிரஞ்சீவி பாடல்

சமூக தளங்களில் வைரலாகும் நடிகர் சிரஞ்சீவி பாடல்

நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படம் ‘வால்டேர் வீரய்யா’. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிரஞ்சீவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.  

மேலும், நடிகர் ரவிதேஜா முதன்முறையாக சிரஞ்சீவியுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். 

ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘பாஸ் பார்ட்டி’ பாடலின் லிரிக்கல் காணொளி சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் இணையதளத்தில் வைரலாக்கப்படுகிறது.

இதே அந்தப் பாடல்

Exit mobile version