Home Uncategorized ஈஸியா டக்குனு காய்கறி புலாவ் எப்படி செய்றதுன்னு பாக்கலாமா!

ஈஸியா டக்குனு காய்கறி புலாவ் எப்படி செய்றதுன்னு பாக்கலாமா!

காலை குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும் வேகத்தில் என்ன  சமையல் செய்வதுனு தெரியவில்லை என்றால் டக்குனு  இந்த வெஜ் புலாவ் ட்ரை செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1 கப்
வெண்ணெய் அல்லது எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தக்காளி – 1 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பச்சை மிளகாய் – 2 (நீளமாக வெட்டியது)
மிளகாய் தூள் – ½ மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கலந்த காய்கறிகள் – 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு)
தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி இலை – சிறிதளவு (அலங்கரிக்க)

செய்முறை:

1. பாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
3. அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
5. மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
6. நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
7. அரிசி சேர்த்து மெதுவாக கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
8. மூடி வைத்து மிதமான தீயில் அரிசி வெந்து, தண்ணீர் ஈர்ந்து விடும் வரை சமைக்கவும் (சுமார் 10-15 நிமிடங்கள்).
9. சுடச் சுட கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Exit mobile version