காரசாரமான இறால் கிரேவி எப்படி செய்யலன்னு பாக்கலாமா?
காரசாரமான இறால் கிரேவி எப்படி செய்யலன்னு பாக்கலாமா?
இறால் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
- இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
- சின்ன வெங்காயம் - 150 கிராம் (நறுக்கியது)
- தக்காளி - 2 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (உங்கள் காரத்திற்கேற்ப)
- தனியா தூள் - 2 தேக்கரண்டி
- சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கவும்.
- மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- மசாலாவின் பச்சை வாசனை போனதும் சுத்தம் செய்த இறாலை சேர்த்து கிளறவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மூடி போட்டு 5-7 நிமிடங்கள் வேக விடவும்.
- இறால் வெந்ததும் கரம் மசாலாவை சேர்த்து கிளறவும்.
- கொத்தமல்லி தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.