Monday, March 23, 2026
HomeUncategorizedரெஸ்ட்டாரெண்ட் ஸ்டைலில் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

ரெஸ்ட்டாரெண்ட் ஸ்டைலில் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் ஆயில் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், முந்திரி இவைகளை போட்டு நன்றாக வதக்கவும். வதக்கிய வெங்காயம். தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

மீண்டும் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் வெண்ணெய் இரண்டையும் போட்டு மசாலா பொருட்களான பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு வதக்கி அதனுடன் அரைத்து வைத்த விழுதை ஊற்றவும். அதில் ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவைக்கேற்ப உப்பு  சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

இதனுடன் நமக்குத் தேவையான அளவு கிரீம் அல்லது காய்ச்சிய கெட்டியான பால் ஊற்றி குழம்பு பதத்திற்கு சரி செய்து கொள்ளவும். பின்னர் இதனை மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் கொதித்த உடன் அதனுடன் பன்னீர்துண்டுகள் சேர்த்து காய்ந்த வெந்தயக் கீரையை சேர்த்து உப்பு சரிபார்த்து மீண்டும் தேவை என்றால் கெட்டியான பால் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு பரிமாறவும். 

ரெஸ்ட்டாரெண்ட் ஸ்டைலில் சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments