இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் பல இசையமைப்பாளர்களும் அவருக்கு ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையின் பெருமையைப் பற்றி உணர்ந்தவர்கள் அவர்களும் தானே. அப்படி இளையராஜாவின் ரசிகராக அவருடைய இசைக் கூடத்தின் முன்பு ‘பாகுபலி, ஆர்ஆர்ஆர்’ படங்களின் இசையமைப்பாளரான கீரவானி என்கிற மரகதமணி ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்துள்ளார். அதோடு அவரையும் சந்தித்து பேசி உள்ளார்.
