Home Uncategorized இலங்கை சிறையில் எத்தனை தமிழக மீனவர்கள்? மத்திய அரசு பதில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

இலங்கை சிறையில் எத்தனை தமிழக மீனவர்கள்? மத்திய அரசு பதில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

இலங்கை சிறையில் எத்தனை தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்? இலங்கை கடற்படை எத்தனை தமிழக மீனவர்களை விடுதலை செய்தது என்கிற விவரங்களை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரியமான மீன்பிடி பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்கள் தங்களது எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி கைது செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி கைது செய்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளது.

Exit mobile version