இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சேர்த்து மொத்தம் 22 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
அதிபர் அனுர குமார திசாநாயக்க: நிதி, டிஜிட்டல் & பாதுகாப்பு அமைச்சர் ஹரிணி அமரசூர்ய: பிரதமர் & கல்வித்துறை அமைச்சர்
நலிந்த ஜயதிஸ்ஸ: சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
கே.டி லால்காந்த: வேளாண்மை, கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்
விஜித ஹேரத்: வெளிநாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
பேராசிரியர் சந்தன அபேரத்ன: பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார: நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
சரோஜா சாவித்திரி போல்ராஜ்: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்
அனுர கருணாதிலக: நகர்ப்புற வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் வீட்டு வசதி அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர்: கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர்
பேராசிரியர் உபாலி பன்னிலகே: கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சர்
சுனில் ஹந்துன்நெத்தி: கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
ஆனந்த விஜேபால: பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்
பிமல் ரத்னாயக்க: துறைமுகங்கள் அமைச்சர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
பேராசிரியர் சுனில் செனவி: புத்தசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர்
சமந்த வித்தியரத்ன: பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
சுனில் குமார கமகே: விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
வசந்த சமரசிங்க: வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன: விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ: தொழிலாளர் அமைச்சர்
குமார ஜெயக்கொடி: எரிசக்தி அமைச்சர்
தம்மிக்க படபாண்டி: சுற்றுச்சூழல் அமைச்சர்
