இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத கடும் பனிப்பொழிவு

இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு காலநிலை மாறி உள்ளது.
கடும் பனிப்பொழிவு, மழை காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. பனிப்பொழிவு எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்களுக்காக 5 பிரதான தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.சம்பா, கங்கரா, குலு, மண்டி ஆகிய மாவட்டங்களில் கடும் மழையும், பனிப்பொழிவும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை குழு எச்சரித்துள்ளது.
குல்லு மாவட்டத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவுறுத்தி உள்ளார்.