தமிழ்நாட்டில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கொரோனா தடுப்பூசி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் மாலை 6 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
வார நாட்களில் அலுவலகம் செல்பவர்களுக்கு ஏதுவாக தடுப்பூசி செலுத்தும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இரவு 10 மணி வரை தடுப்பூசி இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி தெரிவித்துள்ளார். தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் நேர நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் இரவு 10 மணி வரை தகுதியானவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கொரோனா தடுப்பூசி மையங்கள் வழங்கலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து தடுப்பூசி மையங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்துவது அவசியம் கொரோனா வைரஸ் தினசரியும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்து வருகிறது. தமிழகத்தில் தினசரியும் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். முககவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்க முடியும் எனவும் அதிகம் கூட்டம் கூடும் பொது இடங்களில் நடமாட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே கொரோனாவில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
