Home Uncategorized இன்றைய திருப்பாவை பாடல் – 13

இன்றைய திருப்பாவை பாடல் – 13

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

இப்பாசுரத்தில் கிருஷ்ணர் செய்த லீலையான பகாசுர வதம் கூறப்பட்டுள்ளது. கண்ணனை அழிக்க நினைத்த கம்சன் பகாசுரன் என்னும் அசுரனை ஏவினான். அவனும் கொக்கின் வடிவம் கொண்டு சென்று யமுனை நதிக் கரையில் கண்ணனை விழுங்கினான். அவனது நெஞ்சத்தில் கண்ணன் நெருப்பைப் போல எரிக்கவே, அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து தன் அலகால் குத்தத் தொடங்கினான். கண்ணன் அவனது வாய் அலகுகளைப் தனது கைகளால் பற்றி இரண்டாக கிழித்து எறிந்து அவனை வதம் செய்தார்.

இதைத்தான்”புள்ளின் வாய் கீண்டான் ” என்னும் பாசுர வரிகளினால் விளக்குகின்றார் ஆண்டாள் நாச்சியார். அதே போலா ராமாவதார பெலுமையை கூறுகிறார். இலங்கை அரசன் ராவணன் சீதையை கவர்ந்து சென்றான். அவனை வதம் செய்து சீதையை மீட்டவர் ராமர் அத்தகைய பெருமை உடைய நாராயணனின் புகழைப் பாடிய படியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர். வானத்தில் விடிவெள்ளி முளைத்து விட்டது.

வியாழன் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல் நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எழுந்து எங்களுடன் நீராட வா என்று படுக்கையில் இருக்கும் பெண்ணை எழுப்புகின்றனர் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

Exit mobile version