வெற்றி , தோல்வி, லாப நஷ்ட கணக்கு பார்க்காத எவர் கிரீன் ஹீரோ யார் தெரியுமா? நம்ம சீயான் விக்ரம்-தாங்க..!இந்த விக்ரம் ஆரம்பக் கட்டத்தில் பைக் விபத்தில் சிக்கி முதுகெலும்பு உடைஞ்ச வாழ்க்கையை பலரிடம் பல சமயங்களில் விவரிச்சிருந்தாலும் குமுதம் ஹெல்த் இதழுக்காக நம்ம டாக்ட செந்தில் வசந்த் எடுத்த நேர்காணல் கிடைச்சா படிச்சு பாருங்க்.. இப்பவும் நம் முதுகெலும்பு ஜில்லிடும்.. இப்ப எதுக்கு அதெல்லாம் -முன்னு கேக்கறீங்களா? இன்னிக்கு இந்த சிநேகிதன் விக்ரமுக்கு வயசு 59
இந்த கோலிவுட் சினிமாவில் அன்றாடம் ஓரிருவர் புதுசாக அறிமுகமாகிக் கொண்டேதான் இருக்காய்ங்க. அப்படி உருவான வேகத்தில் சினிமாவின் கோர முகங்களுக்கும், உண்மைகளுக்கும், தோல்விகளுக்கும், யதார்த்தங்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் காணாமல் போனவய்ங்க ஏராளம், எக்கச்சக்கம். அதே சமயம் மிகச், சிலர் திரையுலகம் தரும் வலிகளைச் சுமந்து அர்ப்பணிப்போடு நடித்துச் சாதனை படைக்கிறாய்ங்க்க. அவிய்ங்களை இந்தத் திரையுலகம் ’வாடா மகனே.. வா வா!’ என்று தூக்கித் தோளில்வைத்துக் கொண்டாடுது .
அப்படி தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அர்ப்பணிப்பு என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்கு வருபவர்களில் தவிர்க்கவே முடியாதவர் ‘சீயான்’ விக்ரம். ஆம்.. வெள்ளித் திரைவானில் தனித்தன்மையைத் தாண்டி ஒரு கலைஞனாக சில அரிதான குணங்கள், பண்புகள் இருக்கும். அப்படி அரிதான குணங்களைக் கொண்ட அசத்தல் நாயகன்தான் விக்ரம். தனக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதோடு பொதுவான சினிமா ரசிகர்கள் அனைவர் மனதிலும் ஒரு மரியாதையான இடத்தைப் பெற்றிருக்கும் விக்ரம் நம் காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் கொண்டாடப்பட வேண்டிய நாயகன் என்பதில் சந்தேகமில்லை.
கென்னடி ஜான் விக்டர் என்ற நாமகரணம் கொண்ட சீயான் பிறந்தது மெட்ராஸாக இருந்த சென்னையில். ஸ்கூல் டேஸ்லேயே கராத்தே, ஹார்ஸ் ரைடிங்க் , ஸ்விமிங்க் விளையாட்டுகளையும் கற்றுத் தேர்ந்தார். படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் தனது தந்தையின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை லயோலா கல்லூரியில் படித்து முடிச்சார். காலேஜுல் படிக்கும்போது ஒரு வாகன விபத்தில் படுகாயமடைந்து மூன்று வருடம் மருத்துவமனையிலிருந்த விக்ரம் தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டாராக்கும். அந்த அனுபவத்தைத்தான் குமுதல் ஹெல்த் இதழில் டாக்டர் செந்தில் வசந்த் கேட்டு எழுதியிருப்பதை இப்போது படிச்சாலும் ஜிலீர் தட்டும் .
1990-ம் ஆண்டில்தான் விக்ரமின் திரைப் பயணம் தொடங்கிச்சு. ரஜினி, கமல் தவிர இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவருக்கும் முன்பாகவே சினிமாவுக்கு வந்தவரும் விக்ரம்தான். மாடலிங் செய்துகொண்டிருந்த விக்ரம் ரசிகர்களின் பெரும் மதிப்பைப் பெற்ற இயக்குநர் ஸ்ரீதரால் தன் படத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீதர் இயக்கிய ‘தந்துவிட்டேன் என்னை’ படத்தில் இவர்தான் ஹீரோ. 1991-ல் வெளியான இந்தப் படத்துக்கு முன்பாக 1990-ல் வெளியான ‘’என் காதல் கண்மணி’ படத்தின் நாயகனாக தமிழ்த் திரையில் அறிமுகமாகிபுட்டார் விக்ரம். அதன் பிறகு இன்னொரு முன்னோடி இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் ‘காவல் கீதம்’ படத்தில் நடிச்சார். அடுத்ததாகப் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமான ‘மீரா’ படத்தில் நடிச்சார்.
இந்தப் படங்கள் அம்புட்டும் கமர்ஷியலா புட்டுகிச்சு . இதன் காரணமாவோ என்னவோ விடா முயற்சியின்ிஜ முன்னுதாரணமாகத் திகழும் விக்ரமுக்கு தொடக்கத்திலிருந்தே அந்தப் பண்பு இருந்துச்சுது. தமிழில் நாயகனாக நடித்தவர் மலையாளம், தெலுங்கு படங்களில் துணை நாயகனாகவும் சில படங்களில் எதிர்மறை வேடத்திலும்கூட நடிச்சார். ’புதிய மன்னர்கள்’, ‘ஹவுஸ்ஃபுல்’, ‘உல்லாசம்’ எனத் தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் அந்தப் படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டதே தவிர ஒரு நாயக நடிகராக அவருக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தரலை.
அந்த 1990-கள் முழுக்க கிட்டத்தட்ட பத்தாண்டுகள் யெஸ் டென் இயர்ஸ் ஒரு இடத்துக்காகப் போராடிக்கொண்டிருந்தார் விக்ரம். சினிமாவில் முதல் சில படங்களிலேயே முன்னணி இடத்தைப் பிடிச்சவய்ங்க இருக்றாய்ங்க்க. பல ஆண்டு போராட்டத்துக்குப் பின் முன்னணி நடிகரானவய்ங்க்களும் இருக்கிறாய்ங்க்க. விக்ரம் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் மட்டுமல்ல. அந்த வகையைச் சேர்ந்தவர்களில் விக்ரம் அளவுக்கு அளப்பரிய சாதனைகளைச் செய்து இத்தனை ஆண்டுகளாக நட்சத்திர ஏணியில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் மிகச் சிலரே.
1990-களில் விக்ரம் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் செயல்பட்டுக்கொண்டிருந்தார் என்பது இன்றைய 2k கிட்ஸுக்குப் புதுத் தகவலாக இருக்கலாம். அதைவிடப் பின்னாட்களில் தனது சக போட்டியாளரான அஜித்துக்கு அவர் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார் என்பது அனைவருக்குமே ஆச்சரியமளிக்கும். அஜித்தின் அறிமுகப் படமான ‘அமரவாதி’யில் அவருக்குக் குரல் கலைஞராக செயல்பட்டவர் விக்ரம்தான்.
அஜித்துக்கு மட்டுமல்லாமல் பிரபுதேவா (காதலன்), அப்பாஸ் (காதல் தேசம்,) ஆகியோருக்கும் குரல் கொடுத்திருக்கிறார். இதிலும் என்ன ஒரு வெரைட்டியைக் காட்டியிருக்கிறார்!!! டப்பிங் கலைஞர்களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தால் ஒரு வேளை அதிலும் விருதுகளைக் குவிச்சிருப்பார் விக்ரம்.
ஒரு வழியா டிசம்பர் 1999 ல் ரிலீஸாச்சு பாலாவின் ‘சேது’. ஊரே பற்றிக் கொண்டாற்போல, ‘யார்யா இந்த மனுஷன்’ என்று கொண்டாடிச்சு. விக்ரமை ஓரளவு தெரிந்திருந்த போதிலும், சேது படம் வெளிவந்தபோதுதான், ‘அட.. ’அமராவதி ‘அட.. ’அமராவதி படத்தில் இவர் அஜித்க்கு டப்பிங் குரல் கொடுத்தார்.. காதலன்ல பிரபுதேவா குரல் யார்துன்னு நெனைக்கற? விக்ரமு!’ என்று இவரைப் பற்றிய விவரங்களைச் சொல்லி பீத்திக்கிட்டாய்ங்க்க.
’கென்னி’ என்று நண்பர்களால் அழைக்கப்படும் விக்ரம், ரசிகர்களால் ‘சீயான்’ என்று அழைக்கப்பட்டது சேது படத்தினால்தான். சேது படத்தின் கடைசி காட்சியில் இயலாமை கலந்தபடி நாயகியின் உடலைவிட்டு நீங்கி வெளியே நடக்கும் காட்சியில், ஒரு தேர்ந்த நடிகருக்கான அனைத்துத் திறமைகளையும் வெளிக் காட்டியிருப்பார். அதன்பிறகு தில், காசி, தூள், ஜெமினி, சாமி பட்டதெல்லாம் சிக்ஸர்களாகப் பறந்துச்சு.
இவரது சக்ஸஸ் சீக்ரெட், இவரது அர்ப்பணிப்புதான். இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டியும், பின்பு, கடும் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் ஒல்லியாக இளைத்தும் ஆச்சரியப் படுத்தினார். படத்திற்கு என்ன தேவையோ அதைச் சற்றும் யோசிக்காமல் செய்யக்கூடியவர். உடல் இளைக்க வேண்டுமா உடல் எடையைக் கூட்ட வேண்டுமா உடல்நிலையைப் பற்றித் துளியும் கருத்தில் கொள்ளாமல் நூறு சத உழைப்பைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆரம்பம் முதலே செயல்படுத்தி வருபவர். க்ராஃபிக்கா இருக்கும் என்ற கேள்விக்கு, ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், முழுப் பாடல் ஒன்றுக்கு மேடையில் வித்தியாசமான வேடத்தில் வந்து அசத்தி விடையளித்தார்.
‘தாண்டவம்’ திரைப்படத்தில் கண்பார்வையற்றவராக டேனியல் கிஷ் எனும் அமெரிக்கரிடம் ‘எக்கோ லொகேஷன்’ என்னும் நுண்ணிய ஒலியை வைத்து எதிரிலிருப்போரைக் கணிக்கும் முறையைப் பயிற்சியெடு்த்து நடிச்சிருப்பார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து, இயக்குநரின் படைப்பாற்றலுக்கு எந்தளவுக்கு உருவம் கொடுக்க முடியுமோ அதைவிடவும் அதிகமாகத் தன் மெனக்கெடலை அசாத்தியமாகச் செய்யக்கூடியவர் இந்த சீயான்
இடையில் கமர்ஷியல் மாஸ் படங்களில் நடித்துக்கொண்டே பாலாவுடன் மீண்டும் கைகோத்து ‘பிதாமகன்’ படத்தில் சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் சித்தனாக நடித்திருந்தார். ‘சேது’, ‘காசி’ படங்களை விட மிகத் தீவிரமாக தன் உடலின் நிறம் உட்பட அனைத்தையும் மாற்றி நடித்தார். வசனமே பேசாமல் நடித்த அந்தப் படத்துக்கு 2003-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைத் தட்டி தூக்கினார். கமல்ஹாசனுக்குப் பிறகு நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்ற தமிழ்க் கலைஞன் ஆனார்.
கமலுக்கு இணையான நடிப்பையும், ரஜினிக்கு நிகரான மாஸையும் திரையில் காட்டுவதில் வல்லவரிர் மட்டுமே.
மொத்தத்தில் விக்ரம் என்றால், வெறும் ஒரு நடிகர் பெயர் அல்ல. அது ஒரு தன்னம்பிக்கை. உழைப்பின் அடையாளம் என்பதை தனது ஒவ்வொரு படங்களின் வாயிலாகவும் நிரூபித்து வரும் சீயானுக்கு ஹேப்பி பர்த் டே சொல்வதில் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு மகிழ்ச்சி கொள்கிறது
